ஐதராபாத்: ஐதராபாத்தில் உள்ள பட்டதாரி இளைஞர்கள் 3 பேர் காரின் டிக்கியை அழகான கடையாக மாற்றி லண்டன் சாக்லேட் வகைகளை குறைந்த விலையில் கொடுத்து அசத்தி வருகின்றனர். பி.டெக். படித்து முடித்து வேலை தேடி கொண்டிருக்கும் இளைஞர்களான சுருதி, சுவேதா, ராஜசேகர் மூவரும் தலைமை செயலகம் அருகே லண்டன் பேமஸ் ஸ்ட்ராபெர்ரி சாகோ டிப் என்ற பெயரில் சாலையோர கடையை தொடங்கியுள்ளனர். மாலையில் தொடங்கும் இந்த கடை இரவு வரை இயங்குகிறது.
லண்டனில் பிரபலமாக உள்ள ஸ்ட்ராபெர்ரி சாகோ டிப் உள்பட அனைத்து சுவைகளிலும் தயாராகும் சாக்லேட்டுகளை கார் டிக்கியில் வைத்தே தயார் செய்து தருகின்றனர். ஸ்ட்ராபெர்ரி சாகோ டிப், பனானா சாகோ டிப், சாகோ பெரி, டார்க் சாக்லேட், வைட் சாக்லேட் என விதவிதமாக அசத்த்தும் அவர்கள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனை சாக்லேட் மற்றும் வெள்ளை நிற கூழை சரியான கலவையுடன் கலந்து விற்பனை செய்கின்றனர்.
இவர்களின் வகைவகையான புதுவித சுவைகளுக்கு இளைஞர்கள் மட்டுமின்றி பெரியவர்களும், குடும்பத்துடன் வரிசை கட்டுகின்றனர். இங்கிலாந்தில் உள்ள நண்பர்கள் அடிக்கடி ஸ்ட்ராபெர்ரி சாகோ டிப் சாப்பிடும் விடீயோக்களை பார்த்தே இந்தியாவிலும் கடையை தொடங்கலாமே என்ற முடிவுக்கு வந்ததாக கூறும் இந்த மொபைல் சாக்லேட் கடைகளின் உரிமையாளர்களின் ஒருவரான சுருதி அதை அடுத்த நாளே செயல்படுத்தியதாக கூறினார்.
லண்டனில் 950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் இந்த ஸ்பெஷல் வகை பலவகை சாக்லேட் இங்கு வெறும் 69 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக கூறி வியக்க வைக்கிறார். நல்ல ஐடியா மட்டும் இருந்தால் போதும் பெரியளவில் பொருளோ, முதலீடோ தேவையில்லை என்று கூறும் இந்த இளம் தொழில் முனைவோர் பகுதிநேர தொழிலுக்கு ஏற்ற வருமானம் கிடைத்து வருவதாக தெரிவித்தனர். ஹதராபாத் சாலையோர சாக்லேட் கடை வடிகையாளர்களிடையே மிக வேகமாக பிரபலமாகி வருகிறது.
The post ஐதராபாத்தில் காரை அழகான கடையாக மாற்றிய பட்டதாரி இளைஞர்கள்: சாலையோர லண்டன் சாக்லேட் கடைக்கு மக்களிடையே வரவேற்பு!! appeared first on Dinakaran.