×

சீர்காழியில் இடிக்கப்படும் மார்க்கெட் அருகே இடம் ஒதுக்கி தர வேண்டும்

*மீன், இறைச்சி வியாபாரிகள் கோரிக்கை

சீர்காழி : சீர்காழியில் இடிக்கப்படும் மீன்மார்க்கெட் அருகே இடம் ஒதுக்கி தர ேவண்டும் என்று மீன், இறைச்சி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரின் மையப்பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான மீன் மார்க்கெட் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டில் சுமார் 40க்கும் மேற்பட்ட மீன் விற்பனை செய்யும் வியாபாரிகள், ஆடு கோழி இறைச்சி விற்பனை செய்யும் வியாபாரிகளும் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மீன் மார்க்கெட் கட்டிடம் தற்பொழுது சேதமடைந்த நிலையில் போதிய அடிப்படை வசதி இல்லாமல் செயல்பட்டு வந்தது. இதனால் மீன் விற்பனை செய்யும் வியாபாரிகளும், இறைச்சி மற்றும் மீன்களை வாங்க வரும் பொது மக்களும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். சிதலமடைந்த மீன் மார்க்கெட் கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டுமென மீன் வியாபாரிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பழைய மீன் மார்க்கெட் கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிதாக கட்டிடம் கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது புதிய கட்டிடம் கட்ட டெண்டர் விடப்பட்டு பல மாதங்கள் கடந்தும் பணிகள் தொடங்கப்படாமல் இருந்து வருகிறது. இன்னும் பழைய மீன் மார்க்கெட் கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கவில்லை இந்தநிலையில் நேற்று மீன் மார்க்கெட்டை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மீன் ஆடு கோழி விற்பனை செய்யும் வியாபாரிகள் மீன் கூடையுடன் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து புதிய கட்டிடத்தை விரைந்து கட்டி தர கோரி கோரிக்கை மனுக்களை கொடுக்க வந்தனர்.அப்பொழுது மீன் மார்க்கெட் சங்க தலைவர் சேட் கூறுகையில்.

சீர்காழி நகராட்சி மீன் மார்க்கெட் மூலம் 40க்கு மேற்பட்ட வியாபாரிகள் மீன் மற்றும் இறைச்சி விற்பனை செய்து வருகிறோம். தற்பொழுது புதிய கட்டிடத்திற்கு டெண்டர் விடப்பட்டும் இன்னும் பணிகள் தொடங்காததால் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றன எனவே அரசு புதிய கட்டிடத்தை விரைந்து கட்டி தர வேண்டும் அதுவரையில் மீன் மார்க்கெட் பின்புறம் உள்ள இடத்தில் மீன் ஆடு கோழி விற்பனை செய்வதற்கு வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கி தர வேண்டும் என நகராட்சியில் கோரிக்கை வைத்துள்ளோம் அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

மீன் மார்க்கெட் தொடர்பாக மீன் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் நகராட்சி நிர்வாகத்தில் பேசி விரைந்து கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய கட்டிடம் கட்டவும் இடம் ஒதுக்கவும் கோரிக்கை வைத்துள்ளோம். அதனால் வெளி நபர்கள் யாரும் மீன் மார்க்கெட் குறித்து விமர்சனம் செய்ய வேண்டாம் என தெரிவித்தார்.

The post சீர்காழியில் இடிக்கப்படும் மார்க்கெட் அருகே இடம் ஒதுக்கி தர வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Mayiladuthurai district ,
× RELATED சீர்காழி அருகே வானகிரியில் மணல் குவாரியை தடை செய்ய வேண்டும்