×

வெந்தயக்களி

தேவையானவை:

வெந்தயம் – 50 கிராம்,
உடைத்த உளுந்து – 50 கிராம்,
சிவப்பரிசி – 50 கிராம். (மூன்றையும் சிவக்க வறுத்து மாவாக்கிக் கொள்ளவும்),
பனைவெல்லம் – 50 கிராம்,
நெய் – 2 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்,
ஏலப்பொடி – ஒரு சிட்டிகை.

செய்முறை:

ஒரு கப் நீரில் பாதி வாணலியில் விட்டு கொதிக்க விடவும். நல்லெண்ணெய் சேர்க்கவும். பனை வெல்லம், ஏலப்பொடி சேர்த்து மீதி பாதி கப் நீரில் 3 டீஸ்பூன் வெந்தயமாவு சேர்த்து கலக்கி கொதிக்கும் வெல்ல நீரில் சேர்த்து கட்டிதட்டாது, கை விடாது கிண்டி சுருள வருகையில் இறக்கி ஆறவிட்டு நெய் 2 ஸ்பூன் சேர்த்து பறிமாறவும்.

The post வெந்தயக்களி appeared first on Dinakaran.

Tags :
× RELATED சாமை மிளகு பொங்கல்