×

வெந்தய பருப்புத் துவையல்

தேவையானவை:

உடைத்த கறுப்பு உளுந்து – 3 டீஸ்பூன்,
வெந்தயம் – 1 டீஸ்பூன்,
கருப்பு எள் – 1 டீஸ்பூன்,
புளி – நெல்லிக்காய் அளவு,
உப்பு, மஞ்சள் பொடி – தேவைக்கு,
பெருங்காயம் – 1 சிட்டிகை,
வரமிளகாய் – 6,
தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்,
நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு.

செய்முறை:

சூடான எண்ணெயில் தேங்காய், உப்பு, மஞ்சள் பொடி தவிர்த்து பிற பொருட்களை நன்கு சிவக்க வறுத்து, உப்பு, மஞ்சள் பொடி, தேங்காய் சேர்த்து அரைத்து சாதம், சப்பாத்தி, தோசை மற்றும் தயிர் சாதத்துடன் பரிமாற சுகமோ சுகம் (ஜுரம் வாய் கசப்பில் அவதிப்படுவோர் சாதத்தில் நெய் விட்டு இந்த துவையலுடன் சாப்பிட கசப்பு நீங்கும்.

The post வெந்தய பருப்புத் துவையல் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED கோடைகால குழந்தைகள் பராமரிப்பு!