×

ரூ,1000 + ரூ,180 ஜிஎஸ்டி கொடுத்தால்போதும்….சாக்கடை கால்வாய்க்கும், பாஜ எம்எல்ஏ ஆபீசுக்கும்போலி ஐஎஸ்ஓ சான்று வழங்கிய பாஜ நிர்வாகி நிறுவனம்: சர்ச்சையில் வானதி சீனிவாசன்

சென்னை: சாக்கடை கால்வாய்க்கும், பாஜ எம்எல்ஏ ஆபீசுக்கும் போலி ஐஎஸ்ஓ சான்றை பாஜ நிர்வாகி நிறுவனம் வழங்கி உள்ளதாக வெளியான தகவலால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்றது தொடர்பாக சமீபத்தில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து திமுக மாணவர் அணி தலைவர் ராஜிவ் காந்தி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘கோயில் திரைப்படத்தில் நடிகர் வடிவேல் நாச்சியப்பா பாத்திர கடையில் கப் வாங்கியதுபோல் ரூ,5 ஆயிரம் கொடுத்து சான்றிதழ் வாங்கிய வானதி சீனிவாசன், தனது அலுவலகத்திற்கு கியூஆர்ஓ செர்ட் என்ற நிறுவனத்திடம் இருந்து ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்றதாக ஊடகங்கள் மூலம் பெருமையாக விளம்பரப்படுத்தி வருகிறார். இந்த சான்றிதழ் பெற்ற விவகாரத்தில் முறைகேடு இருக்கிறது. வானதி சீனிவாசனுக்கு சான்றிதழ் வழங்கிய நிறுவனத்தின் டெல்லி அலுவலக பொறுப்பாளர் சாலு குப்தா. இவர் பாஜவை சேர்ந்தவர். பாஜ சோசியல் மீடியா கன்வீயர் மண்டல் பாசியம் விகார் என்ற பொறுப்பில் உள்ளார்.

டெல்லி பாசியம் விகார் பகுதியில்தான் கியூஆர்ஓ செர்ட் (குவாலிட்டி ரிசர்ச் ஆர்கனைசேசன்) நிறுவன அலுவலகம் இயங்கி வருகிறது’’ என ராஜிவ் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இதையடுத்து, பலரும் ரூ,5 ஆயிரம் கொடுத்துதான் ஐஎஸ்ஓ சான்றிதழ் வாங்கினீங்களா? என கேள்வி எழுப்பி சமூக வலைத்தளத்தில் கிண்டல் செய்து வருகின்றனர். இந்நிலையில், வானதி சீனிவாசனுக்கு தரசான்று வழங்கிய அதே நிறுவனத்திடம் இருந்துதான் மதுரையில் உள்ள சாக்கடைக் கால்வாயாக மாறி உள்ள கிருதுமால் நதிக்கு குடிநீர் நதி என்ற அடிப்படையில் மதுரை ஜீவா நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்எம் பாபு என்பவர் ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்றுள்ளார்.

இதுகுறித்து ஆர்எம் பாபு கூறுகையில், ‘ஐஎஸ்ஓ சான்று குவாலிட்டி ரிசர்ச் ஆர்கனைசேசன் என்ற நிறுவனம் மூலம் பெற்றுள்ளேன். இதற்கு ரூ,1000 தொகையும், இதற்கென ஜிஎஸ்டி தொகையாக ரூ,180ம் என மொத்தம் ரூ,1,180 செலுத்தினேன். இந்த சான்றினை தந்துள்ளனர். இதே நிறுவனத்தில்தான் பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் எம்எல்ஏ அலுவலகத்திற்கு தரச்சான்று பெற்றுள்ளார். அவர் எவ்வளவு தொகை செலவழித்தார் எனத்தெரியவில்லை. பாஜவினருக்கு இது போலி நிறுவனம் என தெரியாமல் இருப்பது வியப்பளிக்கிறது’ என்றார்.

The post ரூ,1000 + ரூ,180 ஜிஎஸ்டி கொடுத்தால்போதும்….சாக்கடை கால்வாய்க்கும், பாஜ எம்எல்ஏ ஆபீசுக்கும்போலி ஐஎஸ்ஓ சான்று வழங்கிய பாஜ நிர்வாகி நிறுவனம்: சர்ச்சையில் வானதி சீனிவாசன் appeared first on Dinakaran.

Tags : BJP MLA ,Vanathi Srinivasan ,CHENNAI ,BJP ,canal ,Dinakaran ,
× RELATED ராமசீனிவாசனால் வானதி டென்ஷன்: அதிமுக வேட்பாளருக்கு சாபம்