×

சந்திரபாபு விசுவாசி ஜெகன் கட்சிக்கு தாவல்?

மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் சொந்த தொகுதி புலிவேந்துலா. இங்கு அவர் பலமுறை போட்டியிட்டு தொடர் வெற்றிபெற்றார். அவரது மறைவுக்கு பிறகு அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி அந்த தொகுதியில் நின்று வெற்றிபெற்று வருகிறார். இந்நிலையில் அதேதொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் சந்திரபாபுவுக்கு நெருக்கமான சதிஷ் என்பவர் பலமுறை புலிவேந்துலா தொகுதியில் நின்று தோல்வியடைந்துள்ளார். அந்த ெதாகுதியில் ராஜசேகர், ஜெகன்மோகன் ஆகிய இருவரையும் பல தேர்தல்களில் எதிர்கொண்டு சதிஷ் தோல்வியடைந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் வெளியான தெலுங்கு தேசம் வேட்பாளர் பட்டியலில் புலிவேந்துலா தொகுதியில் சதிஷ்க்கு மீண்டும் வாய்ப்பு தரப்படவில்லை.இந்நிலையில் சதிஷை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகியும், கடப்பா தொகுதி மேயருமான சுரேஷ்பாபு, எம்எல்சி ராமசுப்பா ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது தங்கள் கட்சிக்கு வரும்படி அவர்கள் அழைப்பு விடுத்தனர். அதை சதிஷ் ஏற்றதாக தெரிகிறது. ஓரிருநாட்களில் முதல்வர் ஜெகனை நேரில் சந்தித்து அவர் முறைப்படி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post சந்திரபாபு விசுவாசி ஜெகன் கட்சிக்கு தாவல்? appeared first on Dinakaran.

Tags : Chandrababu ,Jagan ,Pulivendula ,Chief Minister ,Andhra Pradesh ,Rajasekhar Reddy ,Jaganmohan Reddy ,
× RELATED முதல்வர் ஜெகன் மோகன் தாக்கப்பட்ட...