×

மோடியின் கெடுபிடிகளை எதிர்க்கும் எனக்கு நோபல் பரிசு தரணும்: கெஜ்ரிவால் பிரசாரம்

புதுடெல்லி: ஒரு புறம் பாஜ மறுபுறம் மோடி அரசு, ஆளுநரின் கெடுபிடிகளுக்கு இடையே டெல்லியில் ஆட்சி நடத்தி வரும் தனக்கு நோபல் பரிசு தரணும் என்று கெஜ்ரிவால் கூறினார். ல்லியில் ஒன்றிய அரசின் உத்தரவால் தண்ணீர் கட்டணம் பல மடங்கு அதிகரித்து. கட்டண உயர்வை ரத்து செய்து, பில் தொகையை குறைக்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அதை அமல்படுத்த விடாமல் துணை நிலை ஆளுநர் முட்டுக்கட்டை போட்டுள்ளார்.

இதை கண்டித்து ஆம்ஆத்மி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:  சுமார் 11 லட்சம் குடும்பங்களுக்கான குடிநீர் கட்டணம் அதிகரித்துள்ளது. இதை ரத்து செய்யவிடாமல் பாஜ தடுக்கிறது. இப்போது மட்டும் டெல்லியில் பாஜ ஆட்சி நடந்து கொண்டிருந்தால் இந்நேரம் 11 லட்சம் குடிநீர் இணைப்புகளுக்கும் கட்டணம் செலுத்தாததால் துண்டிக்கப்பட்டிருக்கும். நான், இணைப்புகளை துண்டிக்கக் கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

ஒரு புறம் பாஜ மறுபுறம் மோடி அரசு, ஆளுநரின் கெடுபிடிகளுக்கு இடையே டெல்லியில் நான் ஆட்சி நடத்தி வருகிறேன். இதற்காகவே எனக்கு நோபல் பரிசு தரணும். ஆனால், எனக்கு மக்கள் ஆதரவு தான் நோபல் பரிசு. ஆம்ஆத்மியை 3 முறை டெல்லி மாநிலத்தில் ஆட்சியில் அமர்த்தியதற்காக மக்களை பாஜ பழிவாங்குகிறது. பாஜவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா கூட்டணியின் வேட்பாளர்களை டெல்லி மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.  இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.

The post மோடியின் கெடுபிடிகளை எதிர்க்கும் எனக்கு நோபல் பரிசு தரணும்: கெஜ்ரிவால் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Kejriwal ,New Delhi ,Delhi ,BJP ,Modi government ,Union Government ,
× RELATED என்னைப்பற்றி கவலை வேண்டாம்; மக்கள்...