×

கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மறியல்

சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி, பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் பார்வையற்ற மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மிழக அரசின் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 4 சதவீத இட ஒதுக்கீட்டில், ஒரு சதவீதம் பார்வையற்றவர்களுக்கு ஒதுக்க வேண்டும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வையற்றவர்களுக்கு உடனடியாக ஆசிரியர்கள் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குறிப்பாக, பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீர் திடீரென சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பார்வையற்ற மாணவர்கள் சங்கம் சார்பில் நேற்று பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் பார்வையற்ற மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

இதனால் பூந்தமல்லி டிரங்க் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த பூந்தமல்லி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பார்வையற்ற மாணவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த போராட்டத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

The post கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மறியல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Kattupakkam ,Poontamalli ,Ted ,
× RELATED மதுரவாயல் அருகே கூரியர் அலுவலகத்தில் தீ விபத்து