×

பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சென்னையில் 44 புறநகர் ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சென்னையில் 44 புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தொடர்ந்து 3-வது வாரமாக தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் – தாம்பரம் இடையே இன்று காலை 11 மணி முதல் 3.15 மணி வரை பராமரிப்பு பணி நடக்க உள்ளது. சென்னை கடற்கரை – தாம்பரம், தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் புறநகர் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் – செங்கல்பட்டு இடையே பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

The post பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சென்னையில் 44 புறநகர் ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே appeared first on Dinakaran.

Tags : Suburban train service ,Chennai ,Southern Railway ,Tambaram-Chennai beach ,Suburban Rail service ,Dinakaran ,
× RELATED ஆட்டிசம் குறையால் பாதிக்கப்பட்ட மகனை...