×

தா.பழூர் அரசு பள்ளியில் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு

தா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தேர்வு எழுதும் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு நடைபெற்றது. அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா ஆணைக்கிணங்க அரசு பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டுமாறு அறிவுறுத்தி இருந்தனர். அதனடிப்படையில் விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் காந்திமதி தலைமையில் பள்ளி நாட்களில் காலை, மாலை மற்றும் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு அனைத்து பாடங்களுக்கும் நடத்தப்பட்டு வருகிறது. வகுப்புகளில் தவறாமல் வருகை புரியும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இந்த சிறப்பு வகுப்பு அமைகிறது. சமூக அறிவியல் பாடத் திட்டத்தில் எளிமையாக மதிப்பெண்கள் பெரும் வகையில் வரைபடம், பயிற்சி வகுப்பு உள்ளிட்டவர்களை சமூக அறிவியல் ஆசிரியர் குணசேகரனால் நடத்தப்பட்டது. மேலும் அறிவியல் பாடத்திற்கு செய்முறை தேர்வு உள்ளது போல் சமூக அறிவியல் பாடத்திற்கும் செய்முறை தேர்வு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும், இப்பாடத்திற்கும் சம பாடவேளை வழங்கப்பட்டால் மேலும் முக்கியத்துவம் பெறும் என்பது சமூக அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விருப்பமாக உள்ளது.

The post தா.பழூர் அரசு பள்ளியில் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு appeared first on Dinakaran.

Tags : Tha.Papur Government School ,Tha.Pazhur ,Tha.Pazhur Government Higher Secondary School ,Ariyalur ,Ariyalur District ,Principal Education Officer ,Vijayalakshmi ,District Education Officer ,Jaya Aanekinanga ,Tha.Palur Government School ,
× RELATED தா.பழூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் உலக காடுகள் தின விழா கொண்டாட்டம்