×

சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோவில் வாலிபர் கைது

விழுப்புரம், பிப். 25: சிறுமி பலாத்கார வழக்கில் ஸ்டூடியோ கடை உரிமையாளரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே எஸ்.கொள்ளூரை சேர்ந்தவர் விஜி(எ)குபேந்திரன்(28). இவர் அரகண்டநல்லூர் பகுதியில் போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் 17 வயது சிறுமியை கடந்த ஒரு மாதமாக காதலித்து வந்துள்ளார்.

இதனிடையே கடந்த 15ம் தேதி வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த குபேந்திரன் சிறுமியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இருசக்கர வாகனத்தில் சிறுமியை குன்னத்தூரில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு அழைத்து சென்று பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ உள்ளிட்ட சட்டத்தில் வழக்கு பதிவு செய்து குபேந்திரனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குபேந்திரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

The post சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோவில் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Villupuram ,VG(A) Kubendran ,S. Kollur ,Kandachipuram ,Villupuram district ,Aragandanallur ,
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...