×

பஸ் நிலைய விரிவாக்க பணி போக்குவரத்து அமைச்சர், எம்பி இன்று துவக்கி வைக்கின்றனர்

 

ஊட்டி, பிப்.25: நீலகிரி மாவட்டத்தில் இன்று (25ம் தேதி) நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் போக்குவரத்துத்துறை அமைச்சர், நீலகிரி எம்பி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மாவட்ட செயலாளர் முபாரக் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர், திமுக துணை பொது செயலாளர் ஆ. ராசா ஆகியோர் இன்று (25ம் தேதி) நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். இதன்படி இன்று காலை 10 மணியளவில் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய பஸ்களை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்க உள்ளனர். தொடர்ந்து 12 மணியளவில் கூடலூரில் அரசு போக்குவரத்து கழக நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

மதியம் 3 மணியளவில் குன்னூர் நகர அலுவலகத்தில் அண்மையில் மறைந்த தலைமை பொதுக்குழு உறுப்பினர் மற்றும் குன்னூர் நகராட்சி தலைவர் ஷீலா கேத்ரின் படத்திறப்பு விழாவில் பங்கேற்கின்றனர். 3.30 மணிக்கு குன்னூர் நகராட்சி பஸ் நிலைய விரிவாக்க பணிகளை துவக்கி வைக்கின்றனர். 4.30 மணிக்கு கோத்தகிரியில் அரசு போக்குவரத்து கழக நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சிகளில் பொதுமக்கள், கழக நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைவரும் தவறாது கலந்து சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பஸ் நிலைய விரிவாக்க பணி போக்குவரத்து அமைச்சர், எம்பி இன்று துவக்கி வைக்கின்றனர் appeared first on Dinakaran.

Tags : Transport Minister ,Nilgiri ,Nilgiri district ,District Secretary ,Mubarak ,Tamil ,Nadu ,SS Sivasankar ,DMK ,Deputy General Secretary ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி பீன்ஸ்...