×

பாரத சாரண சாரணிய இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி

 

கூடலூர், பிப்.25: கூடலூரில் பாரத சாரண சாரணிய இயக்கம் சார்பாக சாரண இயக்கத்தை தோற்றுவித்த சர் பேட்டன் பவுல் 167-வது பிறந்த நாளை முன்னிட்டு சிந்தனை நாள் விழா மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாணவர் இடை நிற்றல் குறைப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி கூடலூரில் நடைபெற்றது. இப்பேரணி புனித தாமஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் துவங்கி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வரை நடைபெற்றது.  பேரணியில் கூடலூர் வட்டார பள்ளிகளில் இருந்து 250 சாரண இயக்க மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக பேரணியை கூடலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் கூடலூர், மார்த்தோமா கல்வி சொசைட்டி செயலாளர் ஜான் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சிகளில் புனித தாமஸ் பள்ளி தலைமை ஆசிரியர் பிரான்சிஸ் சேவியர், முதல்வர் நிஸி மற்றும் கூடலூர் காவல் ஆய்வாளர் கபில்தேவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக கூடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின், அரசு மாதிரி பள்ளி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஐயப்பன், தேவர் சோலை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஆனந்தி,

புளியம்பாறை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். சாரணிய அமைப்பு ஆணையர் அல்டிலா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். விழிப்புணர்வு பேரணியை தொடர்ந்து, மாணவர்களுக்கு கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, மனப்பாடப்போட்டி மற்றும் சாரண இயக்கப்போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சாரண செயலர், நல்லாசிரியர் பால் துரை மற்றும் சாரண பயிற்சி ஆணையர் ரஞ்சித் ஆகியோர் செய்தனர். முடிவில் சாரணிய பயிற்சி ஆணையர் கலைச்செல்வி நன்றி கூறினார்.

The post பாரத சாரண சாரணிய இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Bharat Sarana Saranya Movement ,Cuddalore ,Bharat Sarana Saraniya Movement ,Sir ,Patton Paul ,Bharat Saran Saraniya Movement ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை