×

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

திருச்செங்கோடு, பிப்.25: திருச்செங்கோடு அருகே தோ.கவுண்டம்பாளையம் கிராம மக்கள் பயன்பெறும் வகையில், எஸ்பிகே பள்ளிகள் சார்பில் சூரிய ஒளியால் இயங்கும் தானியங்கி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பு(ஆர்ஓ பிளான்ட்) நிறுவப்பட்டு, திறப்பு விழா நடைபெற்றது. எஸ்பிகே கல்வி அறக்கட்டளை நிறுவனரும், தாளாளருமான செங்கோடன் தலைமை வகித்தார். எஸ்பிகே ஜெம்ஸ் பள்ளியின் தலைவர் பிரபு மற்றும் பள்ளியின் இயக்குநர், முதல்வர்கள் முன்னிலை வகித்தனர்.

எஸ்பிகே கல்வி அறக்கட்டளை சார்பில் ₹10 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்தை, பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் திறந்து வைத்தார். இதன் மூலம் வேலாத்தாள் கோவில், காடச்சநல்லூர், தோ.கவுண்டம்பாளையம் மற்றும் ஐந்துபனை உட்பட சுற்றியுள்ள கிராம மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.

The post குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : drinking water ,plant ,Tiruchengode ,Tho.Koundampalayam ,SPK schools ,Sengkodan ,SPK Education Foundation ,water treatment plant ,
× RELATED டெல்லி சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்..!!