×

உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை துணை சபாநாயகர், கலெக்டர் நேரில் அஞ்சலி

கீழ்பென்னாத்தூர்: திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த கீக்களூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையன் (69). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவர் கடந்த 21ம் தேதி காலை மாடி படியில் இருந்து கால் தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் மூளைச்சாவு அடைந்ததாக தெரிவித்துள்ளனர். இதைதொடர்ந்து கண்ணையனின் மகனான குமார் தனது தந்தையின் உடலில் இருக்கும் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்து தானம் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கண்ணையன் கண்களை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் தானமாக பெற்றனர். இதனை தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து, நேற்று மாலை கண்ணையனின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

The post உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை துணை சபாநாயகர், கலெக்டர் நேரில் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : KILIPENNATHUR ,Kannaiyan ,Keekalur ,Thiruvannamalai district ,Former ,Panchayat Council ,Tiruvannamalai ,
× RELATED கீழ்பென்னாத்தூர் அருகே சாலை...