×

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன் வசதியாக்கல் கூட்டம்

 

செங்கல்பட்டு: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் கடன் வசதியாக்கல் முகாம் கலெக்டர் தலைமையில் ஒருங்கிணைந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர், கூடுதல் ஆட்சியர், சப்-கலெக்டர் முதன்மை வங்கி மேலாளர், வங்கியாளர்கள் மற்றும் திட்டப் பயனாளிகள் கலந்து கொண்டு 7,010 நிறுவனங்களுக்கு ரூ.348.74 கோடி கடன் ஒப்பளிப்பு வழங்கப்பட்டது.
மேலும், அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 19 நபர்களுக்கு ரூ.5.88 கோடி திட்ட மதிப்பீட்டிற்கு ரூ.1.56 கோடி மானியம் பட்டுவாடா செய்யப்பட்டது.

மேலும், மக்களுடன் முதல்வர் முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கான கடன் ஒப்புதல் ஆணை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சுய வேலை வாய்ப்புத் திட்டங்கள், அதன் மூலம் பெறதக்க மானியங்கள் வங்கிகள் கடன் வழங்கும் வகைகள் மற்றும் பெறும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது. ரூ.2764 கோடிக்கு 166 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொண்ட நிறுவனங்களுக்கு வங்கிக் கடன் எளிதாகப் பெற வழிவகை செய்யுமாறு வங்கி மேலாளர்களை கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து கூடுதல் தகவல் பெற பொது மேலாளர், மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டது.

 

The post குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன் வசதியாக்கல் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Enterprises ,Camp ,Integrated District Collector's Office ,Dinakaran ,
× RELATED 4 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து...