×

வீட்டுமனை விற்பதாக ரூ.13.50 லட்சம் மோசடி: உரிமையாளர் கைது

புழல்: கொளத்தூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சிவதாசன் (50). திரு.வி.க நகரில் டீக்கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 2019ம் ஆண்டு, புழல் அடுத்த லட்சுமிபுரம் வஉசி தெருவை சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கு சொந்தமாக, புழல் அடுத்த சூரப்பட்டு சர்வீஸ் சாலையில் உள்ள 600 சதுர அடி வீட்டு மனையை வாங்க முடிவு செய்தார். இதற்காக, ரூ.13 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்றுக்கொண்ட மாரிமுத்து, வீட்டுமனையை சிவதாசனுக்கு பத்திர பதிவு செய்து கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார். இதனால், சிவதாசன் தனது பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். ஆனால், பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுபற்றி சிவதாசன் மாதவரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி, புழல் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, வழக்குப்பதிவு செய்த புழல் போலீசார், நேற்று முன்தினம் மாரிமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

The post வீட்டுமனை விற்பதாக ரூ.13.50 லட்சம் மோசடி: உரிமையாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Sivadasan ,Kolathur Ambedkar ,Mr.V.K Nagar ,Marimuthu ,Vausi Street, Lakshmipuram ,Surapatta service road ,
× RELATED புழல் சிறைச்சாலையில் செல்போன் பறிமுதல்