×

ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் 10 சவரன் செயின் அபேஸ்

பெரம்பூர்: மணலி சின்ன மாத்தூர் கருமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சூரியகலா (57). இவரது கணவர் அர்ஜூனன், டிரைவராக வேலை செய்து வருகிறார். சூரியகலா கடந்த 2 தினங்களுக்கு முன்பு தனது உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ஆவடிக்கு சென்றுவிட்டு, இரவு 8 மணிக்கு ரயில் மூலம் பெரம்பூர் வந்து, அங்கிருந்து வீட்டிற்கு ஷேர் ஆட்டோவில் சென்றுள்ளார். முன்னதாக, இரவு நேரம் என்பதால், நகைகளை அணிந்து செல்ல வேண்டாம் என நினைத்து, அவர் தனது 10 சவரன் மதிப்புள்ள 2 செயின்களை பர்சில் வைத்து எடுத்து சென்றுள்ளார். மாதவரம் நெடுஞ்சாலை வழியாக சென்றபோது, நகை வைத்திருந்த மணி பர்ஸ் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், ஆட்டோ ஓட்டி வந்த நபர் மற்றும் அந்த ஆட்டோவில் பயணம் செய்த சக பயணிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மற்றொரு சம்பவம்: பெரம்பூர் ஜமாலயா அப்துல் ரகுமான் தெருவை சேர்ந்தவர் மேரி பிளாரன்ஸ் சேவியர் (76). ஆர்பிஐ வங்கியில் உதவியாளராக இருந்து ஓய்வு பெற்ற இவர், தனியாக வசித்து வருகிறார். கடந்த மாதம் இவரது வீட்டிற்கு வேலை செய்வதற்கு ஆட்கள் வேண்டும் என்பதற்காக சரவணன் என்ற ஏஜென்ட் மூலம் பாரதி என்ற பெண்மணியை வேலைக்கு நியமித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த நகைகளை சரி பார்த்தபோது தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் என சேர்த்து மொத்தம் ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் 10 சவரன் செயின் அபேஸ் appeared first on Dinakaran.

Tags : Perambur ,Suriyakala ,Manali Chinna ,Mathur Karumariyamman ,Koil Street ,Arjunan ,Suryakala ,Avadi ,
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது