×

குடியரசு தினவிழா மேடையில் சரஸ்வதிதேவி படத்தை வைக்க மறுத்த ஆசிரியை சஸ்பெண்ட்: ராஜஸ்தான் அரசு நடவடிக்கை

கோட்டா: ராஜஸ்தான் மாநிலம் பரன் மாவட்டம், கிஷன்கஞ்ச் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளி உள்ளது. கடந்த மாதம் 26ம் தேதி குடியரசு தின விழா நடந்தது. விழா மேடையில்,மகாத்மா காந்தி, அம்பேத்கரின் படங்கள் வைக்கப்பட்டிருந்தது. தலைவர்கள் படங்களுடன் பெண் தெய்வம் சரஸ்வதியின் படத்தை வைக்குமாறு உள்ளூர் மக்கள் கூறினர். அப்போது பள்ளி ஆசிரியை ஹேமலதா பைர்வா சரஸ்வதி தேவியின் படத்தை மேடையில் வைக்க மறுத்து விட்டார்.

சமீபத்தில் பரன் மாவட்டத்தில் சுற்றுபயணம் செய்த மாநில கல்வி துறை அமைச்சர் மதன் திலாவர் அந்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்றார். இந்நிலையில்,ஆசிரியை ஹேமலதாவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.

The post குடியரசு தினவிழா மேடையில் சரஸ்வதிதேவி படத்தை வைக்க மறுத்த ஆசிரியை சஸ்பெண்ட்: ராஜஸ்தான் அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Saraswati Devi ,Republic Day ,Rajasthan Govt ,Government Primary ,Kishanganj, Baran District, Rajasthan ,Mahatma Gandhi ,Ambedkar ,Rajasthan government ,Dinakaran ,
× RELATED சர்வதேச மகளிர் தினம்: சிறப்பு டூடுல் வெளியிட்டு கொண்டாடிய கூகுள்!!