×

அயோத்தி ராமர் கோயிலுக்கு ரூ.25 கோடி நன்கொடை: அறக்கட்டளை நிர்வாகம் தகவல்

அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலுக்கு இதுவரை ரூ.25 கோடி ரூபாய் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் கடந்த மாதம் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டையுடன் கோயில் திறக்கப்பட்டது. 23ம் தேதி முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாக பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ஜனவரி 23ம் தேதி முதல் இதுவரை 60 லட்சம் பக்தர்கள் ராமர் கோயிலில் தரிசனம் செய்துள்ளனர். 25 கிலோ தங்கம், வௌ்ளி ஆபரணங்கள் உள்பட ரூ.25 கோடி நன்கொடை வசூலாகி உள்ளது” என்று தெரிவித்தார்.

The post அயோத்தி ராமர் கோயிலுக்கு ரூ.25 கோடி நன்கொடை: அறக்கட்டளை நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Ayodhya Ram Temple ,Ayodhya ,Kumbabhishekam ,Ayodhya, Uttar Pradesh ,Ram ,Dinakaran ,
× RELATED ராம நவமி நாளில் அயோத்தி ராமரின்...