×

கூடுதல் விலைக்கு மது விற்பனை 10 சேல்ஸ்மேன் சஸ்பெண்ட்

வேலூர்: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 10 சேல்ஸ்மேன்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்துள்ள விலையை விட கூடுதலாக ரூ.5 முதல் ரூ.10 வரை டாஸ்மாக் பணியாளர்கள் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தடுக்க டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் பறக்கும் படை அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களை உள்ளடக்கிய டாஸ்மாக் மாவட்டத்தில் 108 கடைகள், ராணிப்பேட்டை டாஸ்மாக் மாவட்டத்தில் 83 கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 பேரும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 பேரும் கூடுதல் விலைக்கு மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த 10 சேல்ஸ்மேன்களை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கூடுதல் விலைக்கு மது விற்பனை 10 சேல்ஸ்மேன் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Tasmac ,Tirupattur ,Ranipet ,Tamilnadu ,Dinakaran ,
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...