×

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதாரணி..!

டெல்லி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயதாரணி எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

எதிர் வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சி அவரது கோரிக்கையை நிராகரித்த சூழலில் தொடர்ந்து அவர் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் விஜயதாரணி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேரடியாக ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் முன்னிலையில், தற்போது பரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

மக்களவை தேர்தலில் தன்னை கன்னியாகுமரி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என விஜயதாரணி பாஜகவிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதனை பாஜக ஏறதாக என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

The post காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதாரணி..! appeared first on Dinakaran.

Tags : Congress party ,BJP ,L. A. ,Delhi ,Vlawangodu Block ,Kanyakumari District ,M. L. A. Visayatharani ,M. L. A. ,Visitarani ,Murugan ,Lok Sabha ,Kanyakumari ,
× RELATED திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு...