×

தமிழ்நாட்டில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் நாளை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும். பிப்.26 முதல் 28 வரை தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai Meteorological Department ,Chennai ,South Tamil Nadu ,Chennai Meteorological Center ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 23ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்