×

பள்ளி சிறுவர்களுக்கான தடகள போட்டி உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மேட்டுப்பாளையத்தில் முகாமிட்டு ஆய்வு

தா.பேட்டை, பிப்.24: உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் மேட்டுப்பாளையம் பேரூராட்சியில், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழக முதல்வர் உத்தரவின்பேரில், திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் ஆலோசனையின்படி உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் காளியப்பன் முகாமிட்டு ஆய்வு செய்தார். பேரூராட்சியின் அலுவலக கோப்புகள், மேட்டுப்பாளையம் பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை கிடங்கு, கோணங்கிப்பட்டி மேற்கு அங்கன்வாடி மையம், புதிய வளர்ச்சி திட்ட பணிகள், கட்டிடங்கள், சாலை அமைக்கும் பணிகள், பொது சுகாதாரம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பேரூராட்சி அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு மனுக்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை விசாரித்து எடுக்கப்படும் என தெரிவித்தார். அப்போது, பேரூராட்சி தலைவர் சவுந்தரராஜன், துணைத் தலைவர் செல்வி கோவிந்தசாமி, செயல் அலுவலர் சதீஷ் கிருஷ்ணன் மற்றும் அலுவலக பணியாளர்கள், துறைசார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

The post பள்ளி சிறுவர்களுக்கான தடகள போட்டி உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மேட்டுப்பாளையத்தில் முகாமிட்டு ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,Tha. Pettai ,Mettupalayam Municipal Corporation ,Chief Minister ,Tamil Nadu ,Trichy ,Collector ,Pradeep Kumar ,
× RELATED கோடை சீசன் எதிரொலி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்