×

கொற்கை வீரட்டேஸ்வரர் கோயில் தேரோட்டம் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்

மயிலாடுதுறை: கொற்கை வீரட்டேஸ்வரர் கோயிலில் திருத்தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். மயிலாடுதுறை அருகே கொற்கை கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வீரட்டேஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. மிகவும் பிரசித்திபெற்ற இக்கோயில் 65 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கோயிலில் புதிதாக கொடிமரம் நிறுவப்பட்டு கோயிலில் முன்பு திருவிழாக்கள் கொண்டாடுவதற்கு ஆவணம் செய்யப்பட்டது. அதனையடுத்து மாசிமக பிரமோற்சவம் கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய விழாவாக காமதகன ஐதீக விழா கடந்த 20ம் தேதி இரவு நடந்தது. அதனையடுத்து நேற்று முக்கிய விழாவாக திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஞானாம்பிகை சமே வீரட்டேஸ்வரர் சுவாமி பஞ்சமூர்ததிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேருக்கு எழுந்தருளினார். தருமை ஆதீனம் கட்டளை விசாரணை மத் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் வடம்பிடித்து இழுத்து திருத்தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க கோயில் நான்குவீதிகள் வழியாக திருத்தேரோட்டம் நடைபெற்று நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். 80 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மாசிமக பெருவிழா தொடங்கியதை அடுத்து திருத்தேரோட்டம் நடந்ததால் கிராம மக்கள் திரளானோர் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

 

The post கொற்கை வீரட்டேஸ்வரர் கோயில் தேரோட்டம் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர் appeared first on Dinakaran.

Tags : Korkai Veerateswarar Temple ,Mayiladuthurai ,Gnanambikai Sametha Veerateswarar Swamy temple ,Dharumapuram Atheenam ,Korkai ,Veerateswarar Temple ,
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...