×

ஊருக்குள் புகுந்த புள்ளிமான் மீட்பு

கெங்கவல்லி: கெங்கவல்லி சரகத்திற்குட்பட்ட பைத்தூர் தாண்டவராயபுரம் பகுதியில், தண்ணீர் தேடி ஊருக்குள் ஒரு வயது புள்ளிமான் வந்தது. இதை பார்த்த அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர், மானை மீட்டு பத்திரமாக கட்டி வைத்தார். பின்னர், கெங்கவல்லி வனசரகர் சிவக்குமாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து வனவர் வெங்கடேஷ், வனக்காப்பாளர் பெரியசாமி ஆகியோர், சம்பவ இடத்திற்கு சென்று, மானை மீட்டு, அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

The post ஊருக்குள் புகுந்த புள்ளிமான் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Kengavalli ,Baithur Thandavarayapuram ,Selvaraj ,Vanasarakar Sivakumar ,Dinakaran ,
× RELATED அரசமரத்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள்