×

புதுமையான அறிவியல் கண்டுபிடிப்பு பயிற்சி

போச்சம்பள்ளி: மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஒன்றிய அரசின் அடல் டிங்கரிங் ஆய்வகத்தில், ரோபோடிக், ட்ரோன் கேமரா, முப்பரிமாண பொருள் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை பயன்படுத்தி, மாணவர்கள் தங்களது அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்தி வருகின்றனர். 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, அடல் டிங்கரிங் ஆய்வக பொறுப்பாசிரியர் சக்திவேல், முதுகலை ஆசிரியர் சசிகுமார், முருகன், கார்த்திக், பட்டதாரி ஆசிரியர்கள் சின்னராஜ், பாரதிதாசன், சபாபதி உள்ளிட்டோர் தொடர்ந்து பயிற்சி அளித்து வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் வாசுதேவன் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் சின்னதுரை ஆகியோர், மாணவர்கள் தங்களது அறிவியல் திறனை எவ்வாறு வளர்த்துக் கொள்வது, எவ்வாறு இளம் விஞ்ஞானிகளாக மாறலாம் என்பது குறித்து ஊக்க உரையாற்றினர். இதில் 75 மாணவர்கள் கலந்து கொண்டு, அறிவியல் ஆய்வகத்தை பயன்படுத்தி தங்களது ஆர்வத்தை மேம்படுத்தி வருகின்றனர்.

The post புதுமையான அறிவியல் கண்டுபிடிப்பு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Bochampalli ,Mathur Government Boys Higher Secondary School ,Atal Tinkering Laboratory ,Union Government ,Dinakaran ,
× RELATED போச்சம்பள்ளி அருகே பயங்கரம்...