×

3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு: புதிதாக உருவாக்கப்பட்ட தீவிரவாத தடுப்பு பிரிவு டிஐஜியாக மகேஷ் நியமனம்

சென்னை: தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: உள்நாட்டு பாதுகாப்பு உளவுத்துறை டிஐஜியாக உள்ள மகேஷூக்கு கூடுதல் பொறுப்பாக புதியதாக உருவாக்கப்பட்டுள்ள தீவிரவாத தடுப்பு பிரிவு டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், சிறப்பு பிரிவு எஸ்பிசிஐடி எஸ்பியாக உள்ள அருளரசுக்கு கூடுதல் பொறுப்பாக தீவிரவாத தடுப்பு பிரிவு தலைமையிட எஸ்பியாகவும், கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்பியாக உள்ள சசி மோகனுக்கு கூடுதல் பொறுப்பாக மதுரை தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு: புதிதாக உருவாக்கப்பட்ட தீவிரவாத தடுப்பு பிரிவு டிஐஜியாக மகேஷ் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Mahesh ,-Terrorism Squad ,CHENNAI ,Home Secretary ,Amutha ,Tamil Nadu ,Internal Security Intelligence ,
× RELATED அணியின் நலனுக்காக புதிய...