×

ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு வருவாய்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு வருவாய்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களின் பணித்தண்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும், மேம்படுத்தப்பட்ட ஊதியம் அல்லது தனி ஊதியம் வழங்கிட வேண்டும்.

அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனே ஏற்படுத்திட வேண்டும், 2024 பாராளுமன்ற தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீட்டினை உடனே வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. இதில் மாவட்ட இணைச்செயலாளர் கேசவன் தலைமை தாங்கினார். வட்ட பொருளாளர் ரவீந்திரன், துணைத்தலைவர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்து காலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு வருவாய்துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Revenue department ,Uthukottai taluk office ,Oothukottai ,Oothukottai taluk ,Revenue Department Employees Association ,Tamil Nadu Revenue Department Officers Association ,Oothukottai taluk office ,Dinakaran ,
× RELATED சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை...