×

திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் ரூ.1.1 கோடியில் சிறுவர் பூங்கா பணி தொடக்கம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் ரூ.1.1 கோடி மதிப்பில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கான பணிகளை பேரூராட்சி மன்ற தலைவர் துவக்கி வைத்தார். திருக்கழுக்குன்றம் பேரூராட்சி ருத்திரான் கோயில் பகுதியில் உள்ள 2 ஏக்கர் பரப்பளவில் முட்செடிகள் அடர்ந்து காணப்பட்ட நிலையில், அந்த இடத்தை சீரமைத்து அங்கு சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பேரூராட்சி தலைவர் யுவராஜியிடம் கோரிக்கை வைத்தனர்.

அதனை ஏற்று அப்பகுதியில் சிறுவர் பூங்கா அமைக்க கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, சிறுவர் பூங்கா அமைக்கும் பணிக்காக பூமி பூஜை நேற்று முன்தினம் நடந்தது. இதில், பேரூராட்சி மன்ற தலைவர் யுவராஜ் கலந்து கொண்டு பூங்கா அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். இதில், பேரூராட்சி கவுன்சிலர் பாக்கியலட்சுமி கோபாலகிருஷ்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், சரவணன், வேதகிரி, சீனு, வரதராஜன், வேலு, டில்லி, மாரி உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

The post திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் ரூ.1.1 கோடியில் சிறுவர் பூங்கா பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Tirukkalukunnam Municipal Corporation ,Thirukkalukkunram ,Municipal Council ,Thirukkalukukunram ,Thirukkalukkunram Municipality Rudhiran temple ,
× RELATED திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர்...