×

கணவன் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை

பூந்தமல்லி: கணவன் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அடுத்த திருநின்றவூர், பாக்கம் கிராமம் வெங்கடேசபுரத்தைச் சேர்ந்தவர் மல்லிகா(65). கணவர் இறந்த நிலையில் தங்கை வீட்டில் வசித்து வருகிறார்.

நேற்று மதியம் கணவர் இறந்த துக்கத்தில் தனியாக இருப்பதால் ஏற்பட்ட மன உளைச்சலில், நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், புடவையால் பேன் கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறந்தவரின் தங்கை வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது மல்லிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தகவலின்பேரில் விரைந்து வந்த திருநின்றவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post கணவன் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Mallika ,Venkatesapuram ,Thiruninnavur ,Avadi ,
× RELATED கள்ளக்காதலியை கொன்ற இந்திய வம்சாவளிக்கு 20 ஆண்டு சிறை