×

டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

காஞ்சிபுரம்: திருவள்ளூர் அடுத்த காரணி கிராமத்தில் 40 வயதாகியும் திருமணமாகவில்லை என்ற மன உளைச்சலில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அடுத்த காரணி கிராமம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கேசவன் (60). இவரது அக்கா வனதாச்சி மற்றும் அவரது கணவர் இறந்துவிட்டதால் இவர்களது மகன் ஆனந்தனை தங்கள் வீட்டில் தங்க வைத்துள்ளனர்.

டிரைவர் வேலை செய்து வந்த ஆனந்தனுக்கு 40 வயதாகியும் திருமணமாகவில்லை. இதனால், அவர் மன உளைச்சலில இருந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில், அதே பகுதியில் தம்பி யுவராஜ் வீட்டு ஜன்னலில் நேற்று முன்தினம் மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

The post டிரைவர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Thiruvallur ,Kesavan ,Perumal Koil Street, Thiruvallur ,
× RELATED சென்னை, காஞ்சிபுரத்தில் முதியோர்கள்,...