×

ஒப்புதலின்றி சிதம்பரம் நடராஜர் கோயிலில் மாற்றங்கள், கட்டுமானம் செய்யப்படுகிறதா என நேரில் ஆய்வு செய்வோம்: ஐகோர்ட்!

சென்னை: ஒப்புதலின்றி சிதம்பரம் நடராஜர் கோயிலில் மாற்றங்கள், கட்டுமானம் செய்யப்படுகிறதா என நேரில் ஆய்வு செய்வோம் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. சிதம்பரம் கோயில் பொது தீட்சிதர் குழுவுக்கு ஐகோர்ட் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி. ஆதிகேசவலு அமர்வு எச்சரிக்கை. மாநில அளவிலான நிபுணர் குழு ஒப்புதல் பெறாமல் கோயிலில் மாற்றங்கள், கட்டுமானம் மேற்கொள்வதை தடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. கணக்குகளை சமர்ப்பிக்க பொது தீட்சிதர் குழுவுக்கு உத்தரவிடக் கோரி இந்து சமய அறநிலையத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது.

 

The post ஒப்புதலின்றி சிதம்பரம் நடராஜர் கோயிலில் மாற்றங்கள், கட்டுமானம் செய்யப்படுகிறதா என நேரில் ஆய்வு செய்வோம்: ஐகோர்ட்! appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Natarajar ,temple ,Icourt ,Chennai ,Chidambaram Natarajar temple ,ICOURD ,R. Mahadevan ,P. D. ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ள...