×

மக்காசோள அடை

தேவையானவை

மக்கா சோள ரவை – 1 கப்
தயிர் – அரை கப்
கேரட், குடைமிளகாய்,
வெங்காயம் – பொடியாக நறுக்கியது ஒரு கப்
பச்சைமிளகாய் – 1
பனீர் – சிறிதளவு துருவியது
அரிசி மாவு – 3 தேக்கரண்டி.

செய்முறை:

மக்காசோள ரவையில் தயிர் கலந்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர், பொடியாக நறுக்கிய காய்கறிகள், பச்சைமிளகாய், பனீர் இவற்றை ஒவ்வொன்றாக வாணலியில் வதக்க வேண்டும். பின்னர், வதக்கிய காய்கறிகளை ஊற வைத்த மாக்காச் சோள ரவையுடன் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு கிளறவும். அதனுடன் அரிசிமாவு, தேவையான உப்பு சேர்த்து கிளறவும். அடைமாவு பதத்திற்கு கரைத்துக் கொண்டு, தோசை தவாவில் இரண்டு பக்கமும் திருப்பி போட்டு பொன்னிறமாக அடைகளை சுட்டு எடுக்கவும். சுவையான மக்காளசோள அடை தயார்.

 

The post மக்காசோள அடை appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED இருப்பவல் திருப்புகழ்