×

நிலம் அபகரிப்பு வழக்கு: சேரன்குளம் ஊராட்சி தலைவிக்கு மார்ச் 6 வரை சிறை

திருவாரூர்: ரூ.20 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த அதிமுக பிரமுகரும் ஊராட்சி தலைவியுமான அமுதாவுக்கு மார்ச் 6 வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போலி ஆவணம் தயாரித்து நிலம் அபகரித்த வழக்கில் சேரன்குளம் ஊராட்சி தலைவி அமுதா தலைமறைவாக இருந்தார். தலைமறைவாக இருந்த சேரன்குளம் ஊராட்சி தலைவி அமுதா சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், திருவாரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அமுதா சரணடைந்தார். ஆள்மாறாட்டம் செய்து ரூ.20 கோடி மதிப்புள்ள நிலத்தை அமுதா உள்ளிட்டோர் அபகரித்ததாக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

The post நிலம் அபகரிப்பு வழக்கு: சேரன்குளம் ஊராட்சி தலைவிக்கு மார்ச் 6 வரை சிறை appeared first on Dinakaran.

Tags : Serankulam Oratsi Thalawi ,Thiruvarur ,Amuda ,AMUTA ,SERANKULAM GOVERNMENT ,Serankulam ,Orradashi Thalawi ,Dinakaran ,
× RELATED பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்பு அவசியம்