×

நாகை மாவட்டத்தில் சாலையில் நெல்லை உலர்த்தும் விவசாயிகள் மீது கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் சாலையில் நெல்லை உலர்த்தும் விவசாயிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாகை – திருவாரூர் புறவழிச் சாலையில் சாலையோர நெல் குவியல் மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் குருக்கத்தி மண்ரோடு பகுதியை சேர்ந்த பாலாஜி படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார். இத்தகைய விபத்து நிகழ்ந்ததை அடுத்து உலர் கலன்கள் மற்றும் காலி இடங்களில் கொட்டி நெல் உலரவைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

The post நாகை மாவட்டத்தில் சாலையில் நெல்லை உலர்த்தும் விவசாயிகள் மீது கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Nagai district ,Nagapattinam ,Nagai-Tiruvarur ,Kurukathi ,Dinakaran ,
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...