×

கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய உதகை நீதிமன்றம் அனுமதி: வழக்கு விசாரணை மார்ச் 8க்கு ஒத்திவைப்பு

ஊட்டி: கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய உதகை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் சயான் உட்பட 10 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முக்கிய குற்றவாளியா கருதப்படும் கனகராஜ் சாலை விபத்தில் இறந்தார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இது குறித்த வழக்கு நீலகிரி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கை சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான 49 பேரைக் கொண்ட குழு விசாரித்து வருகிறது. மேலும், இதுவரை சிபிசிஐடி போலீசார் 189 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் நடந்த போது கனகராஜ் செல்போன் டவரில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும், கனகராஜின் செல்போனும் குஜராத் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் பெறப்பட்ட தகவல்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனிடையே கொடநாடு பங்களாவில் நீதிபதி நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீஸ், அரசு வழக்கறிஞர் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். குற்றம்சாட்டபட்டவர்கள் தரப்பில் சயான், வாளையாறு மனோஜ் ஆகியோர் ஆஜராகினர்.

கோடநாடு வழக்கில் சிபிசிஐடி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழு ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை, மின்வாரிய அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழு ஆய்வு செய்ய உதகை மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோடநாடு பங்களாவில் ஆய்வு செய்வதை முழுவதுமாக வீடியோ எடுத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் சாட்சியங்களை அழிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டு வழக்கு விசாரணை மார்ச் 8-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய உதகை நீதிமன்றம் அனுமதி: வழக்கு விசாரணை மார்ச் 8க்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Jedai ,Uthai ,Godanadu Bungalow ,Saiyan ,Kodanadu ,Jayalalitha ,Sasikala ,Dinakaran ,
× RELATED கோடநாடு பங்களாவில் ஜெயலலிதாவுக்கு...