×

கிருஷ்ணராயபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மோட்டார் பாசனம், மானாவாரி பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

கிருஷ்ணராயபுரம் : கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மோட்டார் பாசனம் மற்றும் மானாவாரி சாகுபடியில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர்.
நார்ப்பயிர்களின் அரசனாகவும் வெள்ளைத் தங்கமாகவும் போற்றப்படுவது பருத்தி பயிர்.பருவம் மற்றும் ரகங்கள்; ஆவணி -புரட்டாசி பட்டம் நிலத்தை நன்றாக உழுது பண்படுத்த வேண்டும். குறைந்த ஆழத்தில் மண் கடின அடுக்கு இருந்தால் நிலத்தை கத்திக் கலப்பையைக் கொண்டு 0.5மீ இடைவெளியில் ஒரு திசையில் உழுதல் அவசியம். பின்னர் அதற்கு நேர்செங்குத்தான திசையில் உழுதல் வேண்டும். இதனை மூன்று வருடத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும். தண்டுக் கூன் வண்டு தாக்குதலை தவிர்க்க மண் நன்கு பொடியாகும்படி உழுதபின்னர் எக்டருக்கு வேப்பம்பிண்ணாக்கு 250கிலோ இட வேண்டும்.

ஒரு கிலோ விதைக்கு 100 மிலி 70 சதம் வணிக கந்தக அமிலத்தைப் பயன்படுத்தி அமில நேர்த்தி செய்யவேண்டும். இதன்மூலம் விதைகளின் மேற்பரப்பில் உள்ள துசும்புகளையும், பூச்சிகளின் முட்டைகள், நோய்க்கிருமிகள் ஆகியவை அழிக்கப்பட்டு, விதையுறை மிருதுவாக்கப்பட்டு முளைப்புத்திறனை அதிகரிக்கிறது. விதை நேர்த்தி செய்ய பிளாஸ்டிக் பக்கெட் (அ) கண்ணாடி பாத்திரங்களை பயன்படுத்துதல் வேண்டும். உலோக பாத்திரங்களைப் கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. ஒரு கிலோ விதையை ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் போட்டு 100 மிலி அமிலத்தை ஊற்ற வேண்டும்.

கண்ணாடி (அ) மரக்குச்சியால் 4 நிமிடங்கள் நன்கு கலக்கிய பிறகு வேறு ஒரு பக்கெட்டில் நீர் நிரப்பி அமிலநேர்த்தி செய்த விதைகளை நன்கு கழுவி, அதில் மிதக்கும் விதைகளை அப்புறப்படுத்த வேண்டும். பிறகு விதைகளை நிழலில் உலர்த்திய பின் அவற்றை விதைக்க பயன்படுத்த வேண்டும்.

பார்கள் அமைத்தல்

ரகங்களுக்கு ஏற்ற இடைவெளியில் 6-10 மீ நீளத்தில் பார்கள் அமைக்கவும். இதற்கு இடை இடையே நீர் பாய்ச்சுவதற்கேற்ப வாய்க்கால் அமைக்க வேண்டும். மண் பரிசோதனைக்கு ஏற்ப தழை, மணி மற்றும் சாம்பல் சத்துகளை இடவேண்டும். இல்லையெனில் கீழ்க்கண்டவாறு உர அளவை இடவேண்டும்.

வீரிய ஒட்டு இரகங்கள்

அடியுரம் இடவில்லையெனில், விதைத்த 25 நாள் உரமிவும். இரகங்களுக்கு 50 சதம் தழைச்சத்தும் மற்றும் சாம்பல் சத்தும், முழு அளவு மணி சத்தை அடியுரமாக இடவும். மீதமுள்ள தழை மற்றும் சாம்பல் சத்தை 40-45ம் நாள் இடவும். வீரிய ஒட்டு இரகங்களுக்கு தழைசத்தை மூன்று முறையாக அடியுரம், 45 மற்றும் 60 நாள் இடவும். உரங்களை பட்டையாக மூன்றில் இரண்டு பங்கு உயரத்தில் மேலிருந்து இட்டு மண்ணுடன் கலந்திட வேண்டும்.

மண் அணைத்தல்

விதைத்த 45 ஆம் நாள் பார் சாலை களைந்து பார் எடுத்துக்கட்டி செடிகளுக்கு மண் அணைக்க வேண்டும்.

வளர்ச்சி ஊக்கிகள் தெளித்தல்

நாப்தலின் அசிட்டிக் அமிலம் (பிளானோபிக்ஸ்) 40 பி.பி.எம் கரைசலை மொக்குவிடும் பருவத்தில் தெளிக்கவேண்டும். முதல்முறை தெளித்து ஒருமாதம் கழித்து இரண்டாவது முறையாக 90ம் நாள் தெளிக்க வேண்டும். 40 மில்லி நாப்தலின் அசிட்டிக் அமிலத்தை (பிளானோபிக்ஸ்) ஒரு லிட்டர் நீரில் கரைத்தால் 40 பி.பி.எம் கரைசல் கிடைக்கும். இவ்வாறு செய்வதால் மொட்டுகள் உதிர்வது குறைக்கப்பட்டு காய்கள் அதிகம் பிடிக்க உதவுகிறது.

கோடை இறவையில் பின் விதைப்பு மேலாண்மை:

கோடை இறவை (மாசிப்பட்டம்) பருத்திக்கு ஒரு சத பொட்டாஷ் கரைசலை விதைத்த 50 மற்றும் 70 நாட்களில் தெளிக்க வேண்டும்.

நுனி கிள்ளுதல்

தழைச்சத்து உரங்கள் அதிகமாக இடுவதால் செடிகள் தேவைக்கு அதிகமாக உயரமாக வளர்ந்து விடும். இதனால் செடிகள் அதிக பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும். இச்சமயத்தில் நுனி கிள்ளுதல் அவசியமாகிறது. இவ்வாறு செய்வதால் பக்கக் கிளைகள் உருவாகி பூக்களும், காய்களும் அதிக எண்ணிக்கையில் உண்டாகி காய்கள் உரிய காலத்தில் வெடிக்க உதவுகிறது.

இரகங்களுக்கு 75 80ம் நாளில் 15வது கணுவிலும், ஒட்டு இரகங்களுக்கு 85-90ம் நாளில் 20-வது கணுவிலும் தண்டின் நுனியை சுமார் 10.செ.மீ அளவுக்கு கிள்ளிவிட வேண்டும். காய்கள் திரட்சியாகவும் பருமனாகவும் வரை 2 சதம் டி.ஏ.பி கரைசலை 45 மற்றும் 75ம் நாட்களில் தெளிக்கவேண்டும்.பொதுமக்கள் இயந்திர உலகில் காட்டன் ஆடைகளை உடுத்துவதற்கு பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் பருத்தி உற்பத்திக்கு மத்திய மற்ற மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை வகுத்து விவசாயிகளுக்கு பெரிதும் உறுதுணையாக செயல்பட்டு வருகின்றது.

The post கிருஷ்ணராயபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மோட்டார் பாசனம், மானாவாரி பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Krishnarayapuram ,Krishnarayapuram, ,Karur district ,
× RELATED கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் காற்றுடன்...