×

சிதம்பரத்திலிருந்து திருச்சி செல்லும் புறவழிச்சாலையில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

*பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை

சிதம்பரம் : சிதம்பரம் பகுதியில் இருந்து திருச்சி செல்லும் புறவழிச்சாலை பணி முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு வாகனங்கள் போக்குவரத்து துவங்கி செயல்பட்டு வருகிறது. இதில் விபத்துகள் அதிகமாக நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிதம்பரம் பகுதியில் விழுப்புரம்-நாகை புறவழிச் சாலையில் நான்கு வழி சாலை பணி நடைபெற்று வந்தது. இதில் பல பகுதிகளில் சாலை பணிகள் முடிந்து போக்குவரத்தும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் சிதம்பரத்திலிருந்து திருச்சி செல்லும் புறவழிச் சாலையில் பணிகள் முடிந்து போக்குவரத்து துவங்கியுள்ளது. மேலும் இந்த சாலையில் பல இடங்களில் மேம்பாலமும், சுரங்க வழி பாதைகளும் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது.

மயிலாடுதுறை, சீர்காழியில் இருந்து சிதம்பரம் வரும் சாலை மற்றும் சிதம்பரத்திலிருந்து திருச்சி செல்லும் சாலை பிரிந்து செல்லும் இடத்தில் மேம்பாலம் உள்ளது.இதில் திருச்சி செல்லும் புறவழிச் சாலையில் இருந்து சிதம்பரம் வரும் இரண்டு சக்கர வாகனங்கள், கார், வேன் லாரி, சுற்றுலா பேருந்து உள்ளிட்டவைகளும் வரும்போது, எதிர்புறம் பாலம் இறக்கத்தில் இருந்து சீர்காழி கொள்ளிடம் பகுதியிலிருந்து சிதம்பரம், கடலூர், பாண்டி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்து, கார், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும் இரவு நேரங்களில் இந்த சாலையில் கடந்து செல்லும் வாகனங்கள் பெரும்பாலும் விபத்துகளில் சிக்குகின்றன. எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி, திருச்சி செல்லும் புறவழிச்சாலை இடையே விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post சிதம்பரத்திலிருந்து திருச்சி செல்லும் புறவழிச்சாலையில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Trichy ,Dinakaran ,
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...