×

அதிமுகவுடன் கைக்கோர்க்கும் தேமுதிக?.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு

சென்னை: மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக – தேமுதிக பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரக்கூடிய சூழலில் பிரதான கட்சிகளான அதிமுக – தேமுதிக ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையை தொடந்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. முக்கிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை ஏற்கனவே தொடங்கிவிட்டன.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-வை பொறுத்தவரை தேமுதிக, பாஜக, பாமக என பல கட்சிகள் கூட்டணியில் இருந்த நிலையில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், பிரேமலதா விஜயகாந்த்தை அதிமுக மூத்த நிர்வாகிகள் நேற்று சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் நடைபெற்றதாகவும், அதில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாகவும் கூறப்படுகிறது.

தேமுதிகவினர் தங்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என‌ தெரிவித்த நிலையில் அதிமுக தரப்பில் 5 தொகுதிகள் தேமுதிகவிற்கு தருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அதிமுகவுடன், தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்து வருகிறது. அதிமுக மட்டுமின்றி பாஜகவும் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க கடந்த ஒரு வாரமாக பேச்சுவார்த்தைக்கு முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தேமுதிக-வினர் ஐந்து பேர் கொண்ட தேர்தல் குழுவை அமைத்து வருவதாகவும் நாளை மறுநாள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுவதற்கு வாய்ப்புகள் உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

The post அதிமுகவுடன் கைக்கோர்க்கும் தேமுதிக?.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : DMDK ,AIADMK ,Chennai ,DMK ,Lok Sabha ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...