×

போராடி வரும் விவசாயிகள் மீது பாய்ந்த தேசப் பாதுகாப்புச் சட்டம்: அம்பாலா காவல்துறையின் அறிவிப்பால் அதிர்ச்சி!


ஹரியானா: ஷம்பு எல்லையில் போராடி வரும் விவசாய சங்கங்களின் தலைவர்களை தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அம்பாலா காவல்துறை கைது செய்தது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி டெல்லி நோக்கி செல்லும் ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் மீண்டும் டெல்லி நோக்கி புறப்பட விவசாயிகள் முயன்ற போது, பஞ்சாப், அரியானா எல்லையான கானவுரியில் போலீசாருக்கும் விவசாயிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியும், ரப்பர் குண்டால் சுட்டும் நடத்திய தாக்குதலில் 21 வயது விவசாயி தலையில் குண்டடி பட்டு பரிதாபமாக இறந்தார். இதனால் 2 நாட்களுக்கு விவசாயிகள் போராட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் ஷம்பு எல்லையில் போராடி வரும் விவசாய சங்கங்களின் தலைவர்களை தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக அம்பாலா காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஒரு நபரை 12 மாதங்கள் வரை காரணம் இன்றி தடுத்து வைக்க முடியும். ஒரு நபரை இச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்துள்ளதாக மாநில அரசு அறிவிக்க வேண்டும்.

 

The post போராடி வரும் விவசாயிகள் மீது பாய்ந்த தேசப் பாதுகாப்புச் சட்டம்: அம்பாலா காவல்துறையின் அறிவிப்பால் அதிர்ச்சி! appeared first on Dinakaran.

Tags : Ambala police ,HARYANA ,SHAMBU ,NATIONAL SECURITY ACT ,Punjab ,Delhi Salo ,Delhi ,Dinakaran ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...