×

மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பணி புறக்கணிப்பு போராட்டம்

 

திருப்பூர், பிப்.23: திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை தாசில்தார் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையினை வெளியிட வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதி திருத்த ஆணையினை வெளியிட வேண்டும்.

அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை தாசில்தார் பணியிடங்களை ஏற்படுத்திட வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேலும், கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் அனைத்து பணிகளையும் புறக்கணித்து அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு வருவாய்த்துறையினர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட தலைவர் தங்கவேல் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

The post மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பணி புறக்கணிப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : District Collector ,Tirupur ,Tamil Nadu Revenue Officers' Association ,Tirupur Collector ,Tahsildar ,Dinakaran ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...