×

விபத்தை ஏற்படுத்தியதால் திருவெற்றியூரில் மின் கம்பிகள் உயரமான கம்பத்திற்கு மாற்றம்

திருவாடானை,பிப்.23: தாழ்வாகச் சென்ற மின்கம்பியில் வைகோ லாரி உரசியதில் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தாழ்வாக சென்ற மின் கம்பியை உயரமான மின்கம்பத்திற்கு மாற்றம் செய்யப்படும் பணி நடைபெற்று வருகிறது. திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் அம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலின் தென் பகுதி ரத வீதியில் மின்கம்பி பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டு மின்விநியோகம் நடைபெற்று வருகிறது.

கோயில் பகுதி மற்றும் நடுத்தெரு ஆகிய இடங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட மின் கம்பத்தில் இருந்து மின் கம்பிகள் தாழ்வாக சென்றது.  மேலும் சாலையின் குறுக்கே மின்கம்பி தாழ்வாக சென்றது. இதனால் கடந்த வாரம் வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இந்த பகுதியில் மின்கம்பி தொய்வாக சென்றதால் உடனடியாக உயரமான மின்கம்பத்தை நிறுவி தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்ற மின் வாரியம் உயரமான மின் கம்பங்களை ஊன்றியது. ஆனால் சிறிய மின்கம்பத்தில் உள்ள மின்கம்பிகளை அகற்றி உயரமான மின்கம்பத்திற்கு மாற்றவில்லை. 2 ஆண்டுகளாக உயரமான மின்கம்பம் நடப்பட்டு அப்படியே இருந்தது. வைக்கோல் லாரியில் தீ விபத்து ஏற்பட்டதால், மின்வாரிய ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக தாழ்வாக சென்ற மின்கம்பிகளை அகற்றி, ஏற்கனவே இருந்த உயரமான மின்கம்பத்தில் மாற்றி உள்ளனர். இதனால் வரும் காலங்களில் விபத்து தடுக்கப்படும் வாய்ப்புள்ளது.

The post விபத்தை ஏற்படுத்தியதால் திருவெற்றியூரில் மின் கம்பிகள் உயரமான கம்பத்திற்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Tiruvettiyur ,Thiruvadanai ,Vico ,Bagampriyal ,Amman ,Tiruvettiyur.… ,
× RELATED திருவாடானை அருகே இரவு பகலாக வாகன சோதனை