×

நாகப்பட்டினத்தில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்வைப்பு

 

நாகப்பட்டினம், பிப்.23: நாகப்பட்டினத்தில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். நாகப்பட்டினம் தோனித்துறை ரோடு அருகில் செயல்படும் கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நாகப்பட்டினம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் புஷ்பராஜ் மற்றும் நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் ஆகியோருக்கு புகார் வந்தது. இதையடுத்து நேற்று அந்த இடத்தை ஆய்வு செய்தனர்.

இதில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவுப்படி முதன் முறை குற்றம் என்பதால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 15 நாட்கள் அந்த கடை மூடி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனவே வணிக நிறுவனங்கள் நடத்துவோர் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை கைவிட்டு தொழில் நடத்த வேண்டும் என உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தெரிவித்தனர்.

The post நாகப்பட்டினத்தில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்வைப்பு appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Pushparaj ,Thonithura Road, Nagapattinam ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்