×

மாசாணி அம்மன் கோயிலில் மயான கொள்ளை விழா

ஓசூர், பிப்.23:ஓசூர்-பாகலூர் சாலையில் சமத்துவபுரம் அருகே உள்ள மாசாணி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் மயான கொள்ளை விழா வெகு விமரிசையாக நடத்தப்படும். இந்த ஆண்டு விழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வழிபாடு நடத்தினர். நேற்று காலை தேர்ப்பேட்டை பச்சை குளத்திலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். மேலும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து நள்ளிரவில் மயானக்கொள்ளை நடைபெற்றது.

The post மாசாணி அம்மன் கோயிலில் மயான கொள்ளை விழா appeared first on Dinakaran.

Tags : Grave Robbery Ceremony ,Masani Amman Temple ,Hosur ,robbery ,Masi ,Samathuvapuram ,Hosur-Bagalur road ,Dinakaran ,
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு