×

உசிலம்பட்டி எம்.கல்லுப்பட்டியில் புதிய நியாய விலை கடை திறப்பு

உசிலம்பட்டி, பிப். 23: உசிலம்பட்டி அருகே மள்ளப்புரம் ஊராட்சி எம.கல்லுப்பட்டியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தேனி பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.14 லட்சம் மதிப்பில் புதிய நியாய விலை கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சுமதி பெருமாள், எம்எல்ஏ அய்யப்பன் முன்னிலை வகித்தனர். எம்பி ரவீந்திரநாத் குமார் புதிய நியாய விலை கடையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுக மாநில இளைஞரணி செயலாளர் ராஜ்மோகன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் பிரபு, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகைச்சாமி, சேடபட்டி ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், அய்யர், கார்த்திகேயன், உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் சசிக்குமார், கோஸ்மின், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், போத்திராஜா, இளைஞரணி ராகுல், கூட்டுறவு சார்பதிவாளர் தினேஷ், களஅலுவலர் பாரதிதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post உசிலம்பட்டி எம்.கல்லுப்பட்டியில் புதிய நியாய விலை கடை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Usilampatti ,M. Kallupatti ,Theni Parliamentary Constituency Development Fund ,Mallapuram Panchayat Em. Kallupatti ,Usilambatti ,Panchayat ,
× RELATED 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி...