×

கொடைக்கானல் பகுதியில் மளிகை கடைக்காரருக்கு கத்திக்குத்து மகனுடன் தந்தை கைது

கொடைக்கானல், பிப். 23: கொடைக்கானல் மேல்மலை விடுதலை நகர் குண்டுபட்டி பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் விஜயக்குமார். இதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகின்றனர். கடந்த 6ம் தேதி இதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை (71) என்பவர், இவர்களது கடையில மளிகை பொருட்கள் வாங்கியுள்ளார். அப்போது மது போதையில் இருந்த அவர் வாங்கிய பொருட்களுக்கு பணம் தர மறுத்து தகராறு செய்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் செல்லத்துரை, அவரது மகன் முத்துப்பாண்டி (37) ஆகியோர் விஜயகுமாரின் மளிகை கடைக்கு சென்று பொருட்களை கேட்டுள்ளனர். ஏற்கனவே வாங்கிய பொருட்களுக்கு பணம் தர மறுத்து, செல்லத்துரை தகராறு செய்துள்ளதால் பொருட்கள் தர விஜயகுமார் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்லத்துரை கத்தியை எடுத்து விஜயகுமாரை குத்தினார். முத்துப்பாண்டியும் அவரை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த விஜயகுமார் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுபற்றி அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொடைக்கானல் போலீஸ் எஸ்.ஐ பால் ஜெயசீலன் வழக்கு பதிவு செய்து, செல்லத்துரை, அவரது மகன் முத்துப்பாண்டியை கைது செய்தார்.

The post கொடைக்கானல் பகுதியில் மளிகை கடைக்காரருக்கு கத்திக்குத்து மகனுடன் தந்தை கைது appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Natarajan ,Kundupatti ,Kodaikanal Melammalai Vidyutham Nagar ,Vijayakumar ,Chelathurai ,
× RELATED கோடை சீசனை வரவேற்க பூத்து குலுங்குது போகன் வில்லா