×

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு இன்னல் ஏற்படாத வகையில் நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

பேரவையில் கேள்வி நேரத்தின் போது மயிலம் தொகுதி சிவகுமார்(பாமக) பேசுகையில், ‘‘கடந்த கார்த்திகை முதல் தை மாதம் வரை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்ற பக்தர்கள் நெருக்கடிக்கு உள்ளாகினர்” என்றார்.
அமைச்சர் பி.கே.சேகர்பாபு: இந்த செய்தி பத்திரிகையில் வரப்பெற்றவுடன் முதல்வர் தனி கவனம் செலுத்தி சபரிமலையில் கன்னியாகுமரி தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில் கண்காணிப்பாளர், மணியக்காரரை பணியமர்த்தி பக்தர்களுக்கு உதவிகளை செய்தார். 10 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் அனுப்பப்பட்டது. இனி தமிழ்நாட்டு பக்தர்களுக்கு இன்னல் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வோம்.

The post சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு இன்னல் ஏற்படாத வகையில் நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekharbabu ,Sabarimala ,Assembly ,Sivakumar ,Pamaka ,Mylam Constituency ,Sabarimala Ayyappan temple ,Karthikai ,Tai ,PK Shekharbabu ,Chief Minister ,
× RELATED பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்...