×

மேகதாது விவகாரம் ஒன்றிய அரசை கண்டித்து 29ல் அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி மேலாண்மை ஆணையம் தனது வரையறுக்கப்பட்ட ‘பணி வரம்புக்கு’ அப்பாற்பட்டு, 28வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது பற்றி விவாதித்து, மேல் நடவடிக்கைக்காக மத்திய நீர்வள கமிஷனுக்கு அனுப்பியதை கண்டித்தும், தமிழகத்தின் காவிரி நதிநீர் விஷயத்தில் துரோகம் இழைத்து வரும் மத்திய, மாநில அரசுளை கண்டித்து அதிமுக சார்பில் எனது தலைமையில், வருகிற 29ம் தேதி (வியாழன்) மாலை 4 மணியளவில், தஞ்சாவூர் திலகர் திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும்.

The post மேகதாது விவகாரம் ஒன்றிய அரசை கண்டித்து 29ல் அதிமுக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Union government ,Meghadatu ,Chennai ,General Secretary ,Edappadi Palaniswami ,Cauvery Management Authority ,Cauvery ,Dinakaran ,
× RELATED அத்தியாவசிய பொருட்கள் விலை...