×

4,900 பள்ளிகளுக்கு 900 கி.மீ. சுற்றுச்சுவர்: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது அறந்தாங்கி தி.ராமச்சந்திரன் (காங்.) கேட்ட கேள்விகளுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அளித்த பதில்: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் ஏகணிவயல் ஊராட்சியில் ஏகணிவயல் தென்பாதி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு சுற்றுச்சுவர் சுமார் 800 மீட்டர் நீளத்தில் வரும் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.16.07 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும். தமிழகத்தில் 4900 பள்ளிகளுக்கு 900 கிலோ மீட்டர் நீளத்திற்கு சுற்றுச்சுவர் கட்ட ரூ.499 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட அந்த பணிகள் நடைபெற்று வருகிறது. ஊராட்சிகளை பிரிப்பது குறித்து உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊராட்சிகளை பிரிப்பதற்கும் ஒன்றியமாக, பேரூராட்சியாக மாற்றவும் ஒரு குழு அமைக்கப்பட்டு கருத்துரு பெற்று நிறைவேற்றப்படும்.

The post 4,900 பள்ளிகளுக்கு 900 கி.மீ. சுற்றுச்சுவர்: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister I. Periyasamy ,Rural Development ,Minister ,I. Periyasamy ,Aranthangi T. Ramachandran ,Congress ,Ekanveyal ,South Half Panchayat Union Primary School ,Aranthangi Panchayat Union ,Pudukottai District ,I.Periyaswamy ,
× RELATED 100 சதவீதம் வாக்களித்தல் விழிப்புணர்வு...